பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு விளக்கமறியல்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது நேற்றைய தினம் கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திஸ்ஸநாயகத்திடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் வேண்டுகோள் விடுத்ததையடுத்தே இந்த உத்தரவு பிடிக்கப்பட்டது இதேவேளை ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தை விடுவிக்ககோரி ஐந்து ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து நீதிமன்றத்துக்கு அருகில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டது சுதந்திர ஊடக அமைப்பு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போராம,; ஊடகவியலாளர் சம்மேளனம், ஆகிய அமைப்புகள் இந்த அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டதென மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating