எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக கூறி தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் தலைமறைவு
Read Time:1 Minute, 11 Second
எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக அச்சுறுத்தி அக்குழந்தையின் தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவத்திலிருந்து தப்பி வந்த சிப்பாயை கைது செய்வதற்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர் 23வயதான இந்த யுவதியின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார் யுவதி தனது எட்டுமாத குழந்தையுடன் ஆனமடுவில் உள்ள வீட்டிலிருந்த சமயம் இராணுவச் சிப்பாய் வானில் வந்து அவரை கடத்திச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து எட்டுமாத குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி யுவதியை பாலியல் வல்லுறவு செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Average Rating