இரண்டு மகள்களுடன் பாலியல் சேட்டை செய்த தகப்பனுக்கு விளக்கமறியல்
அக்ரைப்பற்று பதூர் நகர்பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த கிராண்ட்பாஸைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது மகளிடம் பாலியல் சேட்டை செய்து வருகிறார் என்ற முறைப்பாட்டை அடுத்து அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 4ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர் இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கட்டடத் தொழிலாளியான தகப்பன் அண்மைக்காலமாக புத்தி குறைந்த தனது மூத்த மகளிடம் பாலியல் சேட்டை செய்து வருவதாகவும் இரண்டாவது மகளிடம் முறைகேடாக நடக்க முற்பட்ட சம்பவங்களையடுத்து தகப்பன் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகள் கிராண்ட்பாஸில் இருக்கும் தங்கள் மாமாவுக்கு தொலைபேசியில் அறிவித்ததையடுத்து கிராண்ட்பாஸ் பொலிஸார் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு அறிவித்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து தகப்பன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating