இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார்.
Read Time:58 Second
இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு சென்று அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்துள்ளார்.
யாழ். குடாநாட்டை இன்று காலை சென்றடைந்த அவர், பலாலியில் உள்ள சிறிலங்காப் படைத்துறைச் செயலகத்தில் யாழ். மாவட்ட சிறிலங்காப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ உட்பட்ட படைத் தளபதிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் யாழ். மாவட்ட அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து தற்போதைய யாழ். நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
Average Rating