பெண்களை கிறிஸ்தவ பேராயராக நியமிப்பதற்கு எதிர்ப்பு
Read Time:1 Minute, 12 Second
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிகன் சர்ச் எனப்படும் கிறிஸ்தவ சபையில், 8 கோடி கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். 1300 தேவாலயங்கள் உள்ளன. இந்த சபையில் பெண்களை பேராயராக (பிஷப்புகள்) நியமிக்க தலைமை பேராயர் (ஆர்ச் பிஷப்) ரோவன் வில்லியம்ஸ் தீர்மானித்தார். இதற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த பேராயர்கள், பாதிரியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த சபை பிளவுபடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த எதிர்ப்பை ஆர்ச் பிஷப் அலட்சியப்படுத்தினார். இதனால் கோபம் கொண்ட 300 பிஷப்புகள், `ஆர்ச் பிஷப் வில்லியமின் தலைமையை ஏற்க மாட்டோம்’ என்று அறிவித்து உள்ளனர். அவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
Average Rating