வீடு வாங்கினால் வீட்டு எஜமானியை திருமணம் செய்யலாம்: ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பு

Read Time:2 Minute, 4 Second

அமெரிக்காவைச் சேர்ந்த டெவன் டிரபோஷ் என்ற 42 வயது பெண்மணி, ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புளோரிடாவில் அவருக்கு சொந்தமான 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு உள்ளது. அது நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் உடைய வீடாகும். அதை விற்பதற்கு ஓராண்டுக்கு முன்பு ஏல இணையதளத்தில் அவர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. இதையடுத்து, அவர் மனதில் ஒரு வினோத யோசனை பிறந்தது. வீட்டை வாங்கினால் தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார். வீட்டின் விலை ரூ.1 கோடியே 36 லட்சம் என்றும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் வீட்டின் விலை ரூ.3 கோடியே 36 லட்சம் என்றும் அவர் விலை நிர்ணயித்துள்ளார். இத்தனைக்கும் அவருக்கு திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவரை இழந்த அவர், இதன்மூலம் மறுமணத்துக்கு முயன்று வருகிறார். வீட்டை வாங்குபவர் தன்னை திருமணம் செய்து கொண்டால், வீட்டை பிரியாமல் வீட்டோடு இருந்து கொள்ளலாமே என்பது அவரது எண்ணம். அவரது யோசனைக்கு கண்டனமும் எழுந்துள்ளது. ஒரு மகள் ஆதரவும், மற்றொரு மகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். டெவன் டிரபோஷின் அறிவிப்பை பார்த்து விட்டு அவரை சுமார் 500 பேர் தொடர்பு கொண்டுள்ளார்கள். ஆனால் இன்னும் அவர் தனது வருங்கால கணவரை தேர்ந்தெடுக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்டவாளத்தில் முத்தம்-காதலி பலி, காதலன் கால் ‘கட்’!
Next post நடுக்கடலில் வேட்டை: இளவரசர் வில்லியம் ரூ.320 கோடி போதைப் பொருளை கைப்பற்றினார்