இரத்த வெறி பிடித்த புலிகளை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும்! -ஆனந்த சங்கரி

Read Time:2 Minute, 19 Second

சர்வதேச சமூகத்திற்கு சவாலாகவுள்ள LTTE அதன் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நிறுத்தாவிடின் அதனை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும் என தமிழர் விடுதலை முன்னணியின் தலைவரும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை என்பவற்றுக்கான யுனேஸ்கோ விருது பெற்றவருமான ஆனந்ததசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்குக்குப் பயணம் செய்த ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த புலிகளின் செயலைக் கண்டித்து பிரான்ஸின் பாரிஸ் நகரத்திலிருந்து நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஜனாதிபதி மீது தாக்குதல் நடத்தும் புலிகளின் முயற்சி வெற்றியளித்திருப்பின் அது மிகவும் பாரிய அழிவுகளைக் கொண்டுவந்திருக்கும். அத்துடன் புலிகள், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியைக் கொலை செய்த இரத்தவெறிமிக்க செயற்பாட்டை ஒத்ததாகவும் இருந்திருக்கும். புலிகள் தமது காட்டுமிராண்டித்தனமான நடத்தைகளை உடனடியாகக் கைவிட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் நிபந்தனையற்றவிதத்தில் ஆயுதங்களை கீழே வைப்பதற்கும் உடன்பட வேண்டும். இதை அவர்கள் விரைவாகவோ அல்லது தாமதித்தோ செய்ய வேண்டுமென்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் படிப்பிணையாகவுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுக்கடலில் வேட்டை: இளவரசர் வில்லியம் ரூ.320 கோடி போதைப் பொருளை கைப்பற்றினார்
Next post பாகிஸ்தான் பிரதமர் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல்