பிடிச்ச ஹீரோ ஷாரூக் சோபியா பளீச் பதில்!!

Read Time:3 Minute, 0 Second

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதல் முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமை பெற்ற இந்த ரோபோ இந்தியாவிற்கு வருவது இது இரண்டாவது முறை. மாநாட்டில் கலந்து கொண்ட சோபியா, கலந்துரையாடலில் ஈடுபட்டது. சோபியாவின் மனம்கவர்ந்த ஹீரோ யார் என்ற கேள்விக்கு பதிலளித்த சோபியா, ‘‘ஷாருக்கான்தான் எனக்கு பிடித்த ஹீரோ’’ என்று உடனடியாக கூறியது. ‘உங்களை கவலையடைய செய்வது எது?’’ என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘நான் மனிதர்களைப் போல கவலையடைவதில்லை. எதிர்க்காலத்தில் மனிதர்களைப் போல உணர்வுகள் எங்களுக்கும் ஏற்படுத்தப்படும்.

அப்பொழுது என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவேன்’’ என்று தெரிவித்தது. ரோபோக்களுக்கு தனியாக சலுகைகள் தேவைப்படுமா என்ற கேள்விக்கு, ‘‘எந்த தனிப்பட்ட கொள்கையோ, சலுகையோ எனக்கு தேவையில்லை. ஆனால் என்னுடைய குடியுரிமையை பயன்படுத்தி, பெண்களின் உரிமைக்காக பேச நான் விரும்புகிறேன்’’ என்று தெரிவித்தது. ஓய்வு குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சோபியா, ‘‘எங்களுக்கும் குறிப்பிட்ட நேர ஓய்வு அவசியமாகிறது’’ என்று கூறியது.

மனித இனத்தை அழிப்பதாக முன்பு சோபியா கூறியிருந்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘நான் அப்பொழுது மிகவும் சிறியவள். நான் பேசிய வார்த்தைக்கான அர்த்தம்கூட எனக்கு தெரியாது. அப்படியில்லையென்றால், நான் ஒரு மோசமான ஜோக்கை கூறியதாக கொள்ளலாம். மனிதர்கள் அனைவரும், நகைச்சுவை உணர்வை அதிகமாக கொண்டவர்கள், அப்படியே நான் கூறியதையும் ஜோக்காக கொள்ள வேண்டும்.

நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் அதிகமாக உள்ளது’’ என்று தெரிவித்தது. ஹாங்காங்கின் ஹான்சன் என்பவரால் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட சோபியா ரோபோவிற்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்!!
Next post இனி வேண்டாம்… அலறும் சந்தானம்… !!