ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் அதிகரிக்க ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2015ம் ஆண்டு சம்பள திருத்த மசோதா பரிந்துரைகளின்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2.096 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:
ஊழியர்களின் அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 22.008 சதவீதத்தில் இருந்து 24.104 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ.838.87 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வு 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கணக்கிடப்படும். இந்த தொகை ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்படும். ஏப்ரல் மாத சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating