மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!!
Read Time:1 Minute, 15 Second
கண்டி – குருநாகல் பிரதான வீதியில் மாவத்தகம, மெடிபொக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டர் சைக்கிள் ஓட்டுனர் கண்டி வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் கலகெதர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வதுயாய, வேஉட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating