லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி ஆராய்ச்சி நிதியுதவி!!

Read Time:2 Minute, 37 Second

உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உள்ளாகியுள்ள லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. ‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’ என்ற விளைவால் ஏற்படுவது லூபஸ் நோய். ஆபத்தான நோயாக கருதப்படும் இந்த நோய் ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நோயின் தாக்கத்தை குறைக்கலாம், ஆனால், குணப்படுத்த முடியாது. உலக அளவில் இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இந்த நோயின் தாக்கம் அதிகம். தமிழில் இதை ‘முகப்புற்று’ என்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு ஹார்மோன் கோளாறுகளை காரணமாக சொல்கிறார்கள். உடல் முழுவதும் தோல் உரிந்து சிவந்து தெரியும்.
அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள இந்திய வம்சாவளி பேராசிரியர் சந்திர மோகன் என்பவர், இந்த நோய் குறித்து தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

நம்மை தாக்கும் நோய்களுக்கு எதிராக வெள்ளை அணுக்களில் உள்ள பி மற்றும் டி செல்கள் போராடுகின்றன. ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டி ெசல்கள் அவர்களின் சொந்த செல்களுக்கு எதிராகவே போராட ஆரம்பித்து விடும். இதன் அதிகமான செயல்பாட்டை குறைப்பதன் மூலம் லூபஸ் நோயை கட்டுப்படுத்த முடியும் என்பது பேராசிரியர் சந்திர மோகனின் ஆராய்ச்சி. இந்த ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ‘லூபஸ் ஆராய்ச்சி கூட்டமைப்பு’ இவருக்கு ரூ.3.8 கோடி ஒதுக்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெனோபாஸ் நேரத்தில் சாப்பிட வேண்டியவை!!
Next post தொண்டையில் சிக்கிய முள்!!