மெனோபாஸ் நேரத்தில் சாப்பிட வேண்டியவை!!

Read Time:2 Minute, 55 Second

எல்லா பெண்களும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டிய ஒரு விஷயம் மெனோபாஸ். சில பெண்களுக்கு மாதம்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் திடீரென்று நின்றுவிடும். சிலருக்கு மூன்று நாள் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ், இரண்டு நாள், ஒரு நாள் என படிப்படியாக குறைந்து நின்றுவிடும். இன்னும் சிலருக்கோ, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து, அப்படியே நின்றுவிடும். இந்த மூன்று வகைகளிலுமே ரத்தப்போக்கு வழக்கம்போல சாதாரணமாகவே இருந்துவிட்டால், உங்கள் மெனோபாஸ் காலக்கட்டத்தை, ‘’இதுவும் கடந்துபோகும்’’ என்று என்ஜாய் செய்யுங்கள். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை பார்க்கவும். ரத்தப்போக்கு அதிகமாக வருவதற்கு காரணம், கர்ப்பப்பையின் உள்வரி சவ்வு தடிமனாக இருப்பதே. இந்த பிரச்னை, பின்னாளில் கர்ப்பப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.

உடல்பருமனே எல்லா பிரச்னைகளுக்கும் மூலகாரணம். எனவே, முப்பதுகளிலேயே உங்கள் உடல்பருமனை விரட்டுங்கள். இதுதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய முதல் விஷயம். நீரிழிவோ அல்லது ரத்தக்கொதிப்பு இருந்தாலோ அதை முதலில் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இந்த மூன்று விஷயங்களிலும் பிட்டாக இருந்துவிட்டால், மெனோபாஸுக்கு பிறகான காலத்தையும், எந்தவித மன உளைச்சலும், உடல் உபாதையும் இல்லாமல் சந்தோஷமாக கழிக்கலாம்.

மெனோபாஸ் சமயத்தில், கால்சியம் சத்து உடம்பில் அதிகளவு குறையும். அதனால், பால், கேழ்வரகு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்சத்தும் குறையும் என்பதால், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது நலம். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தினமும் சாப்பிடலாம். காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். நீரிழிவு இல்லையென்றால், எல்லா பழங்களையும் சாப்பிடலாம். நீரிழிவு இருந்தால், கொய்யா, வெள்ளரிக்காய் மட்டும் போதுமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளரும் நடிகைகள் மீது புகார் தருவதா? கண்ணடித்த நடிகை திடீர் டென்ஷன்!!
Next post லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி ஆராய்ச்சி நிதியுதவி!!