காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!!

Read Time:1 Minute, 49 Second

நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தேசிய அளவிலான மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ஆராய்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரியானா மாவட்டத்தில் நடந்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:இந்தியாவில் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற நாடுகள் 2030ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டீன் ஏஜ் செக்ஸ்?!
Next post பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக காரணம் இந்தியாவும், சீனாவும்தான் : அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!!