மனித உரிமை இயக்கங்கள் எதிர்ப்பை மீறி சீன ஒலிம்பிக் தொடக்க விழாவில் புஷ் பங்கேற்கிறார்
Read Time:1 Minute, 6 Second
சீனாவில் ஆகஸ்டு 8-ந் தேதி ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழா நடைபெறுகிறது. அதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபர் புஷ், ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று மனித உரிமை இயக்கங்கள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால் இதை புஷ் நிராகரித்து விட்டார். அவர் நிச்சயமாக ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டானா பெரினோ தெரிவித்துள்ளார். இதை விளையாட்டு போட்டியாகவே புஷ் பார்ப்பதாகவும், அமெரிக்க தடகள வீரர்களை ஊக்கப்படுத்த அவர் செல்வதாகவும் அவர் கூறினார்.
Average Rating