ரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா!!

Read Time:1 Minute, 21 Second

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்’, படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

சில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷிக்கும் ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண நிகழ்வு இந்து முறைப்படி மார்ச் 17, 18 மற்றும் 19 என மூன்று தினங்கள் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊசிமுனை ஓவியங்கள்..!!
Next post ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – நடிகைகளின் மர்ம மரணங்கள்!