ஊசிமுனை ஓவியங்கள்..!!

Read Time:3 Minute, 31 Second

ஷாரி ஹைலைட்டர் (ஸ்டோன் மெத்தட்)

ஒரே வண்ணத்தில் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சேலையினை அதிக நேரம் செலவு செய்யாமல், குறைவான நேரத்தில் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை பேப்ரிக் கம் கொண்டு சேலை முழுவதும ஒட்டி கண்ணைக் கவரும் விதமாக ஹைலைட் செய்யும் முறையினை தோழி வாசகிகளுக்காக செய்து காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்சியாளர் அனுராதா.

தேவையான பொருட்கள்

உட்ஃப்ரேம், பேப்ரிக் கம், ஷர்தோசி நீடில், ஷரி நூல், டூத் பிக், வட்ட வடிவ பெரிய ஸ்டோன், ஸ்டிக் ஸ்டோன், நீளவடிவ நீட்டு மணி, ஓவல் வடிவ குந்தன், மெஷின் நூல் (சேலை கலரில்).

1 டிசைன் வேண்டிய இடத்தை மையப்படுத்தி உட் ஃப்ரேமில் இணைத்து நன்றாக டைட் செய்து கொண்டு, பேப்ரிக் கம்மால் டாட் வைக்க வேண்டும்.

2 வட்ட வடிவ பெரிய சைஸ் ஸ்டோனை கம்மின் மேல் ஒட்டி காயவிட வேண்டும்.

3 வட்ட வடிவ ஸ்டோனைச் சுற்றி பேப்ரிக் கம்மை மெல்லிய லேயராகத் தடவி காய வைக்க
வேண்டும்.

4 அதை சுற்றி டூத் பிக் கொண்டு ஒவ்வொன்றாக ஸ்டிக் ஸ்டோனை வட்ட வடிவில் ஒட்டி காய வைக்க வேண்டும்.

5 ஷரி நூலை ஷர்தோசி நீடிலால் கீழிலிருந்து கோர்த்து, நீள் வடிவ நீட்டு மணியினை ஒவ்வொன்றாக ஊசி முனையில் கோர்த்து அடுத்த லேயராக வட்ட வடிவில் இணைக்க வேண்டும்.

6 மீண்டும் நீட்டு மணியினை ஷரி நூலால் படத்தில் காட்டியிருப்பதுபோல் திலக் வடிவத்தில் வட்ட வடிவை மையப்படுத்தி கோர்க்க வேண்டும்.

7 சேலையினை ஹைலைட் பண்ணும்போது சற்று பளிச்சென்று தெரியவேண்டும் என்பதற்காக அதேபோல் நீட்டு மணியினை இணைத்து அருகிலேயே இன்னொரு லேயரை திலக் வடிவத்தை ஒட்டி போட வேண்டும்.

8 திலக் வடிவத்தைச் சுற்றி அதேபோல் பேப்ரிக் கம்மை மெல்லிய லேயராகத் தடவி ஓவல் வடிவக் குந்தைனை டூத் பிக் கொண்டு ஒட்ட வேண்டும். சேலை முழுவதும் இதேபோன்ற ஸ்டிக் ஸ்டோனை அருகருகே தனித்தனியாக ஒட்ட வேண்டும்.

ஒரே நிறத்தில் உள்ள சாதாரண சேலையினை கூடுதலாக மெருகூட்டி ஹைலைட் பண்ண ஒரு சேலைக்கு ரூ.4000 வரை வேலைப்பாட்டையும், எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் பொறுத்து விலை நிர்ணயம் செய்யலாம்.(வரைவோம்…)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகள்!!
Next post ரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா!!