பெண்ணாக மாறும் தனது உடலுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் பாடகர் கோரிக்கை

Read Time:2 Minute, 31 Second

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவர் தனது உடலில் பெண்ணுக்கு உரித்தான மாற்றங்கள் அதிவேகமாக நடந்து வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்துவதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரைச் சேர்ந்தவர் டெரி ரைட், பொது நிகழ்ச்சிகளில் பாடுபவர். தனது உடலில் பெண்ணுக்கு உண்டான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்பு தலைமுடி கொட்ட ஆரம்பித்தது. மீசை தாடியும் உதிர்ந்தன. தோல் மென்மையாக ஆரம்பித்தது. மார்பகமும் பெரிதாகியுள்ளது. பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்னை “ஷீமேன்’ என்று கூறி கிண்டல் செய்கின்றன. ஒரு நாள் குழந்தை ஒன்று என்மீது மோதிவிட்டத. அதற்கு அதன் அம்மா, “”அந்த ஆன்ட்டிகிட்ட மன்னிப்புக் கேளு’ என்று சொல்லி கேவலப்படுத்திவிட்டாள். நான் ஆண்தான். பெண் அல்ல. பெண்ணாக மாற நான் எந்தச் சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. தானாக இப்படியெல்லாம் நடக்கிறது. நான் ஆணாகவே இருக்க சிகிச்சை அளியுங்கள் என்று எத்தனையோ டாக்டர்களிடம் கேட்டுவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை. 5 பிள்ளைகளுக்கு தகப்பன் நான். 60 வயதில் ஏன் இந்தச் சோதனையோ! எனத் தெரிவித்தார். சந்தேகப்பட்ட டாக்டர்கள் அவர் மனநிலை சரியில்லாதவரா என்றும் சோதனை நடத்திப் பார்த்தனர். நன்கு தெளிவாகத்தான் இருக்கிறார் என்று மனநல டாக்டர் கூறிவிட்டார். பெண்களது ஹார்மோன் ஈஸ்டிரோஜன் சுரப்பு இவரது உடலில் அதிகம் இருப்பதாக ரத்தப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தங்களது மருத்துவ அனுபவத்தில் இது போல கேள்விப்பட்டதில்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங். தலைவராக தங்கபாலு நியமனம்
Next post நேபாள சிறையில் கம்பி எண்ணும் கடத்தல் மன்னன் சோப்ராஜின் காதலுக்கு போலீஸ் `திடீர்’ தடை