காங். தலைவராக தங்கபாலு நியமனம்

Read Time:2 Minute, 9 Second

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.கிருஷ்ணசாமி இருந்தார். இவருக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.வி.தங்கபாலு இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி வெளியிட்டார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான தங்கபாலு தற்போது சேலம் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட்டுள்ளனர். குஜராத் காங்கிரஸ் தலைவராக எம்எல்ஏ சித்தார்த் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தாக்கூர் கவுல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமாதானப் பேச்சுக்களில் இனிமேல் மாற்றுத் தமிழ் அமைப்புக்களும் பங்கேற்பர்: றஜீவ விஜயசிங்க
Next post பெண்ணாக மாறும் தனது உடலுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் பாடகர் கோரிக்கை