என்னுடைய ஒரே இலக்கு பாராளுமன்றம் செல்வதே- கேணல் கருணா
இலங்கை திரும்பியுள்ள என்னுடைய ஒரே இலக்கு நேர்மையான முறையில் பாராளுமன்றம் செல்வதே என்று லங்கபதீப சிங்கள பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் வழங்கிய விசேட பேட்டி ஒன்றில் கேணல் கருணா என அறியப்பட்ட விநாயக மூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர் தான் இன்னும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அங்கத்தவர் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் இரண்டாக உடைவதற்கு யாருக்கும் இடம் வழங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அரசாங்கத்தில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளை இரண்டாக உடைப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாக தெரிவித்த கருணா இத்தகைய சூழ்ச்சி இடம்பெறுவது ஜனாதிபதிக்கு தெரியாமலேயென்றும், தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் வெற்றியை ஜீரணிக்க முடியாத சிலர் அரசாங்கத்தில் இருப்பதாகவும், மேலும் எதிர்வரும் காலத்தில் இது பற்றி ஜனாதிபதியை சந்தித்து தெளிவுபடுத்த தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார். என்னால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இவ்வளவு குறுகிய காலத்திற்குள் மக்களின் ஆதரவினை பெற்றுள்ளதை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் என்னை கைது செய்யும்படி பல மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன என்றும் அதே நேரம் கைது செய்யப்படவேண்டிய பெருந்தொகையானோர் வெளியே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating