கொலை சம்பவம் தொடர்பில் சகோதர்கள் இருவர் கைது!!

Read Time:1 Minute, 48 Second

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39 கொலனி செல்லபுரம் வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்ணன் தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை இன்று (04) கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு செல்வபுரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மயில்வாகனம் கமலேஸ்வரன் என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன் அதில் காயமடைந்த 19 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

இக்கொலை தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் 19 வயது இளைஞரை நேற்று சந்தேகத்தின்பேரில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

அதனை தொடர்ந்து பொலிஸாரின் விசாரணையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரின் சகோதரனை இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 15 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகிழக்கு மாநிலத்தில் வெறுப்பு அரசியல் நிராகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு!!
Next post (மருத்துவம்)அம்மை நோய்க்கு மருந்தாகும் வேப்பிலை!!