மங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்!!

Read Time:1 Minute, 48 Second

மங்களூரு கப்பல் துறைமுகத்திற்கு 2 பிரமாண்ட சொகுசு கப்பல்கள் வந்தது. நடப்பாண்டில் இதுவரை 20 சொகுசு கப்பல்கள் வந்துள்ளதாக கப்பல் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கப்பல் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரு துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் இரண்டு பிரமாண்ட பயணிகள் சொகுசு கப்பல் வந்தது. 1771 பயணிகள் மற்றும் 809 ஊழியர்கள் வந்த கோஸ்டா விக்டோரியா பயணிகள் சொகுசு கப்பலில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்தனர். இதேபோல், அமெரிக்கா, கனடா நாட்டு சுற்றுலா பயணிகள் 612 ேபர் மற்றும் 407 ஊழியர்கள் அடங்கிய மற்றொரு கப்பலும் வந்தது.

இரு கப்பல்களிலும் வந்த சுற்றுலா பயணிகள் மங்களூருவில் உள்ள பிரசித்திப் பெற்ற சுற்றுலா தலங்களான மங்களா தேவி கோயில், கோகர்ணா, தேவாலயங்கள், முந்திரி பருப்பு தொழிற்சாலை, கார்களாவில் உள்ள பாகுபலி கோவில், மூடபித்ரி ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பல இடங்களை சுற்றிப்பார்த்தனர். கோஸ்டா விக்டோரியா கப்பல் சலாஹ் என்ற இடத்திற்கும் மற்றொரு கப்பல் கொச்சுக்கும் சென்றது. அடுத்த கப்பல் நாளை வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது!!
Next post ஆபரேஷன் ப்ளூஸ்டாரில் இங்கிலாந்து தலையீடு ரகசிய ஆவணங்கள் வெளியிடுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!!