ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்
Read Time:1 Minute, 3 Second
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் .இடம்பெற்று வரும் ஆட்கடத்தல், காணாமல்போதல் மற்றும் மனிதப்படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தவென தனிநபர் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது..
இதற்கென ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியான மஹானாம திலகரத்னவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடக தகவல்கள் மூலம் கிடைத்த முறைப்பாடுகளின் பிரதிபலனாகவே ஜனாதிபதி இந்த நியமனத்தை செய்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..