பாக்.கில் முதன் முறையாக செனட்டராக இந்து பெண் தேர்வு!!
பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக இந்து பெண் ஒருவர் செனட்டராக (எம்.பி.யாக) தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் நாகர்பார்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் கோல்ஹீ(39). இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினராவார். சிந்து மாகாணத்தில் நடந்த தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் வரலாற்றில் இந்து தலீத் பெண் ஒருவர் செனட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கோல்ஹீ. இவரது குடும்பத்தினர் சுமார் 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளனர். அப்போது அவருக்கு மூன்று வயது. பின்னர் 9ம் வகுப்பு படித்து கொண்டிருக்கையில் அவருக்கு லால்சந்த் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னரும் படிப்பை தொடர்ந்த கோல்ஹீ கடந்த 2013ம் ஆண்டு சிந்த் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை படிப்பை முடித்தார். இவர் தனது சகோதரனுடன் சேர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சமூக ஆர்வலராக இணைந்தார்.
Average Rating