(மகளிர் பக்கம்)வெடிப்பற்ற பாதங்களுக்கு…!!

Read Time:4 Minute, 31 Second

மழை மற்றும் குளிர்காலங்களில் நாம் நடக்கும் அனைத்து இடங்களும் ஈரப்பதத்துடனே இருக்கும். இந்த காலகட்டங்களில் குதிகால் வெடிப்பு சேற்றுப்புண் போன்ற சிறு சிறு தொந்தரவுகள் வரும். குதிகால் வெடிப்பு உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவில் தீவிரமான பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தி, நடப்பதில் சிரமத்தை கொடுக்கும்.

நம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதங்களை பாதுகாப்பது எப்படி என்பதை சொல்கிறார் அழகுகலை நிபுணர் வீணா. “குளிர்காலங்களில் நாம் பாத சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. பெரும்பாலானோர் பாதங்களை பராமதிப்பதில் கவனம் செலுத்துவது கிடையாது. இது கால போக்கில் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடுகிறது. பாதங்கள் மென்மையாகவும், வெடிப்புகள் இன்றியும் அழகாக இருக்க சில வழி முறைகளை கடைப்பிடித்தாலே போதுமானதாக இருக்கும்.

பார்லர்களில் பாதங்களுக்கு என்று சிறப்பு பெடிக்கியூர் உள்ளது அதை மாதம் ஒரு முறை செய்துக்கொள்ளலாம். பார்லர் போகமுடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிலவற்றை செய்து பாதங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். பாதங்களுக்கு மேல் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு எளிய முறை ஸ்கரப் பயன்படுத்தலாம்.

ஸ்கரப் செய்ய தேவையான பொருட்கள் – 2 டியூஸ் ஸ்பூன் சக்கரை, கொஞ்சம் சோப் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணை மூன்றையும் ஒரு பௌலில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும். இந்த எளிய முறை ஸ்கரப் நல்ல பயனளிக்கும்.

குதிகால் வெடிப்பைப் போக்கும் இந்த முறையில் அடுத்தாக வெதுவெதுப்பான நீர் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை மேற்கொள்ள தேவையான பொருட்கள் – வெதுவெதுப்பான நீர், கல் உப்பு , சோப் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய், பியூமிக் கல். ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சோப் ஆயில் மற்றும் கல் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனுள் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின் மெருகேற்றும் கல்லான பியூமிக் கல்லை கொண்டு குதிகால்களைத் தேய்க்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த தோல்கள் நீங்கிவிடும். அதன் பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி மசாஜ் செய்துக்கொள்ளலாம், மாய்ஸ்சுரைசர் இல்லை என்றால் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவேண்டும்.

கால்களில் உள்ள நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து மிதமான சுடுநீரில் குளிக்க வேண்டும். மிருதுவான செருப்பு பயன்படுத்துவது நல்லது. கடற்கரை மணல், தோட்டங்களில் வெறும் காலில் நடப்பது நல்லது. இது ரத்த ஓட்டத்தை சீரமைத்து பாதங்களுக்கு நன்மை தரும்.”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (அவ்வப்போது கிளாமர்)பெண்கள், ஆண்களைவிட அதிக எண்ணிக்கையில் தேர்வில் தேறுகிறார்களே, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ?
Next post பாக்.கில் முதன் முறையாக செனட்டராக இந்து பெண் தேர்வு!!