ஆட்சி மாற்றம் வரும்? இத்தாலி, ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் : உலகமே முடிவை எதிர்பார்க்கிறது!!

Read Time:3 Minute, 49 Second

இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இம்முறை இரு நாடுகளிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ளதால், ஆட்சி மாற்றம் நடக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் 18வது முறை நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. லூஜி டிமா தலைமையிலான ஐந்து நட்சத்திர கட்சி, முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லூஸ்கோனி தலைமையிலான மத்திய வலது சாரி கட்சி, ஆளும் ஜனநாயக கட்சி ஆகியவை இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக இருந்தன.

சுமார் 30 லட்சம் மக்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். பொருளாதார நெருக்கடி, அளவுக்கு அதிகமாக அகதிகளை அனுமதித்தல் உள்ளிட்டவை பிரதான பிரன்னையாக உள்ளன. இத்தாலியில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் நாடாளுமன்ற தேர்தலில் 35 இடங்களை சில்வியோ பெர்லூஸ்கோனியின் கட்சி பெறும் என்றும் அதற்கடுத்த நிலையில், இரண்டாவது இடத்தை ஐந்து நட்சத்திர கட்சி பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் மூன்றாவது இடத்தை மத்திய இடதுசாரி பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைய பிரதமர் பாவலோ ஜென்டிலோனோவுக்கு சுத்தமாக வாய்ப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெர்லூஸ்கோனி வரி மோடி வழக்கில் சிக்கியதால், அடுத்த ஆண்டு வரையில் பிரதமராக பதவி ஏற்பதில் சிக்கல் உள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவரும்.

இதேபோல், ஜெர்மனியிலும் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு இறுதியில் அங்கு முதல்கட்ட தேர்தல் நடந்தது. ஆனால், அதில் மெஜாரிட்டி நிரூபிக்க இன்னும் 60 சதவீத வாக்குகள் தேவைப்படுகிறது. அதற்கான தேர்தலே நேற்று நடந்தது. இரு நாடுகளிலும் எதிர்க்கட்சிக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அது இந்நாடுகள் பயன்படுத்தும் யூரோ பணமதிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் டாலர் மதிப்பிலும் எதிரொலிக்கும். இதனால் டாலரை நம்பி வர்த்தகரை மேற்கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தேர்தல் முடிவை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோ)முகமாலை பகுதிக்கு ஜநா வின் சிறப்பு பிரதிநிதி விஜயம்!!
Next post இந்தோனேசியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட அரியவகை சுமத்ரா புலி!!