இந்தோனேசியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட அரியவகை சுமத்ரா புலி!!
Read Time:1 Minute, 21 Second
உலகின் மிகவும் அரியவகை உயிரினமான சுமத்ரா வகை புலி கொடூரமாக கொல்லப்பட்டது வனஉயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மன்டெய்லிங் நாடல் என்ற மலை கிராமத்தில் மிகவும் அரியவகையாக கருதப்படும் சுமத்ரா இனப்புலி ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்டு, தோல் உரிக்கப்பட்டு ஒரு தொழிற்சாலையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டது வனத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்தோனேசியா வனத்துறை நடத்திய விசாரணையில் புலியின் பெரும்பாலான பாகங்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிறன்று வனத்திற்கு வேட்டையாட சென்ற மலை கிராமத்தை சேர்ந்தவர்களை புலி தாக்கியதாகவும், இதனால் அந்த புலி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மொத்தம் 400 சுமத்ரா வகை புலிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating