40-ஐ கடக்கும் ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவாம்

Read Time:2 Minute, 26 Second

திருமணத்தை தள்ளிப் போடும் ஆண்களா நீங்கள்? உங்களை எச்சரிச்கின்றனர் ஆய்வாளர்கள். ஆம், 40-வயதை கடந்துவிட்டால் குழந்தைப் பேறு கிடைப்பது அரிதாம். எனவே, திருமணத்தை காலகாலத்தில் முடியுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது தொடர்பாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, பெண்கள் தாய்மையடைவது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 30 வயதைக் கடந்து திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், அரிதாகவே தாய்மையடைவதாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, குழந்தைப் பேறு தொடர்பாக நடுத்தர வயது ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், 40-வயதை கடக்கும் ஆண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாவது பெரும்பாலும் அரிதாகவே இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வயதை நெருங்கும் போது, அவர்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்னைகளே இத்தகு குறைபாட்டுக்கு பிரதான காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாரிஸ் நகரில் உள்ள மகப்பேறு மையத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை, அங்கு மகப்பேறு வேண்டி வரும் தம்பதியினரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 30 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் 13.6 சதவீதம் பேருக்கு குழந்தைப் பேறு கிடைப்பதாகவும், அதே சமயம், 45 வயதை நெருங்கும் நபர்களுக்கு மூன்றில் ஒரு பங்கினருக்கே அந்தப் பேறு கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாழ்க்கையில் மழலைச் செல்வம் உள்ளிட்ட அனைத்து செல்வங்களையும் சரியான நேரத்தில் பெற வேண்டுமானால், காலகாலத்தில் நடைபெற வேண்டிய திருமணத்தை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது என்பதே யதார்த்த உண்மை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காளதேசத்தில் பஸ்கள் மோதியதில் 20 பேர் பலி
Next post இத்தாலி நாட்டு புலிகள் இயக்கப் பிரதிநிதிகள் 4 மில்லியன் யூரோ கருப்புப்பணம் சேகரித்த வழக்கு ஒத்திவைப்பு