ஜி 8 அமைப்பில் மற்ற நாடுகளை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு
Read Time:1 Minute, 27 Second
ஜி 8 எனப்படும் பணக்கார நாடுகளின் அமைப்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ரஷியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி 8 அமைப்பில் உள்ளன. ஜி 8 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் திங்கள்கிழமை தொடங்கியது. ஜி 8 அமைப்பில் வேறு நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் நிகோலஸ் சார்கோஸி கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ரோ இதுபற்றி கூறுகையில், ஜி 8 அமைப்பில் மேலும் உறுப்பினர்களை சேர்க்க அமெரிக்கா விரும்பவில்லை என்றார். புதிய உறுப்பினர்களை சேர்க்கத் தேவையில்லை என்று ஏற்கெனவே ஜப்பான் அறிவித்துள்ளது. முதல் முறையாக அமெரிக்கா இப்போது தனது கருத்தை வெளியிட்டுள்ளது.
Average Rating