பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தல்!!
மாநில நலன்களை முன்வைத்து தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது முயற்சிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வுபெற்ற மற்றும் பதவியில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார்.அப்போது நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் பல்வேறு மாநிலங்களின் நதிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளதாகவும் கூறினார்.
உண்மையான கூட்டாட்சி நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் மாநில நலன்களில் அடிப்படையிலான ஓரு தேசிய கோள்கை உருவாக்க தேவை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.மற்ற நாடுகள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கும்போது இந்தியாவில் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றமுடியாத நிலை தொடர்வதாகவும் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார்.
Average Rating