இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

Read Time:1 Minute, 40 Second

இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 4 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இதனை அடுத்து இன்று பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்கரான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது அணுசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பிரின்ஸில் மட்டும் எதிரொலிக்கவில்லை என்று கூறிய பிரதமர் மோடி அவை இந்திய அரசியலமைப்பிலும் அடங்கியுள்ளதாக கூறினார். இருநாட்டு இளைஞர்களும் இரு நாட்டை பற்றி பரஸ்பரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் பிரான்சில் இருந்து முதலீடுகளை வரவேற்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்!!
Next post பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தல்!!