விருந்தில் சந்திப்பு ; நயன்தாரா-விஷால் காதலா? பரபரப்பு தகவல்கள்
சிம்புவும் நயன்தாராவும் விருந்தொன்றில் சமீபத்தில் சந்தித்தனர். இதனால் இருவருக்கும் மீண்டும் காதல் துளிர் விட்டதாக பேச்சு பரவியது. ஆனால் இச் சந்திப்பை நயன்தாரா விரும்பவில்லை என்றும் திரிஷா எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பி சிம்புவை வரவழைத்ததாகவும் கூறப்பட்டது. தற்போது மேலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நயன்தாரா இன்னொரு நடிகரை காதலிப்பதாகவும் அவருடன் விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது சிம்பு அங்கு வந்ததாகவும் தகவல் பரவியுள்ளது. சிம்புவும் இதை உறுதிபடுத்தியுள்ளார். நயன்தாராவுடனான காதல் முறிந்து போன கதை என்றும் அவர் கூறியுள்ளார். ஓட்டல் விருந்து சந்திப்பு பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ஓட்டலுக்கு சில நடிகர்கள் என்னை அழைத்தனர். நயன்தாரா இன்னொரு நடிகரை காதலிப்பதாகவும் உங்கள் தரப்பில் இருந்து பிரச்சினை ஏதும் செய்யக்கூடாது என்றும் கூறினர். நான் யாரோ அவர் யாரோ என ஆன பிறகு அவர் யாரை காதலித்தால் எனக்கென்ன கல்யாணம் செய்தால் எனக்கென்ன என்று சொல்லி விட்டு வந்தேன் என்று கூறினார். நயன்தாரா காதலிக்கும் இன்னொரு நடிகர் யார் என்பது பரபரப்பான கேள்விக்குறியாகியுள்ளது. விருந்தில் நயன்தாராவும் விஷாலும் பங்கேற்று உள்ளனர். இருவரும் சத்யம் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். எனவே விஷாலைத்தான் நயன்தாரா காதலிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. விஷால் ஏற்கனவே ஒரு நடிகையை காதலிப்பதாக தெரிவித்து இருந்தார். பெயரை அவர் வெளியிடவில்லை. என்காதல் பற்றி அந்த நடிகைக்கே தெரியாது என்றும் கூறி இருந்தார். என்றாவது ஒருநாள் காதலை அவர் புரிந்து கொள்வார் என்றும் தெரிவித்து இருந்தார். அப்போது பிரியாமணியை அவர் காதலிப்பதாக திரையுலகினர் இணைத்து பேசினர். இருவரும் மலைக்கோட்டை படத்தில் ஜோடியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் காதலிப்பது நயன்தாராவை என்பது தெரிய வந்துள்ளது. சத்யம் படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
Average Rating