கொடும் பஞ்சம்: தெரு நாயை அடித்து சமைத்து சாப்பிட்ட நபர் (உலக செய்தி)!
வெனிசுலா நாட்டில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நபர் ஒருவர் தெரு நாயை அடித்து உணவாக சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. இதனால் உணவு தட்டுப்பாடு நாட்டின் பல்வேறு மாநில மக்களை திக்குமுக்காட செய்துள்ளது.
இந்த நிலையில் பல நாள் உணவின்றி பரிதாப நிலையில் இருக்கும் நபர் ஒருவர் தெரு நாய் ஒன்றை அடித்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குப்பை மேடு ஒன்றில் அமர்ந்து குறித்த நபர் நாய் உணவு சமைப்பதில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு காலத்தில் எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் தற்போதை நிலை மிகவும் கொடூரமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி அங்குள்ள பணத்தாள்கள் தற்போது மதிப்பே இல்லாத வெறும் ககிதமாக மாறியுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது தெரு நாய்களை துரத்திச் செல்லும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், இதுதானே உங்கள் ஆசையும் கூட என ஜனாதிபதி மாதுரோவை கேள்வி கேட்கும் தொனியில் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில் வெனிசுலா நாட்டில் 80 விழுக்காடு மக்கள் ஒரு நாள் ஒரு வேளை உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர்.
இதில் 60 விழுக்காடுன் மக்கள் வருவாய் ஏதுமின்றி வாரத்தில் 5 நாட்களும் பட்டினியுடன் உறங்கச் செல்கின்றனர்.
பொருளாதார நிலையில் உச்சத்தில் இருந்த வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி தற்போது வெறும் 1.5 மில்லியன் பாரல்கள் என அடிமட்டத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating