நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றினர்

Read Time:1 Minute, 55 Second

நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மாவோயிஸ்டுகள் கைப்பற்றினார்கள். இந்தி நடிகை மனிஷா கொய்ராலா. இவர் `முதல்வன்’ தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் மும்பையில் தங்கி இந்தி படத்தில் நடித்தாலும், இவரது தாய் நாடு நேபாளம் ஆகும். அந்த நாட்டு பிரபல அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா தான் அந்த நாட்டு பிரதமர் கொய்ராலா ஆவார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், தலைநகர் காத்மாண்டுவில் புதனில்கந்தா என்ற இடத்தில் உள்ளது. இந்த நிலத்தை மனிஷா வாங்கி, அதை தன் தாயார் சுஷ்மா கொய்ராலாவுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நிலத்தை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அதில் பயிரிட்டு உள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது மனிஷா நேபாளத்தில் இல்லை. அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார். அவரது தந்தை பிரகாஷ் கொய்ராலா மும்பையில் இருக்கிறார். அவரது தாயார் சுஷ்மா மட்டும் தான் காத்மாண்டுவில் வசித்து வருகிறார். அவரால் நிலம் கைப்பற்றப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதுபற்றி கருத்து கேட்பதற்கு மனிஷா கொய்ராலா குடும்பத்தினரை தொடர்பு கொண்டபோது, யாருமே கிடைக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்தை அழிக்க வேண்டும்; பின்லேடனின் 16 வயது மகன் அழைப்பு
Next post பாகிஸ்தானில், 35 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்த தலீபான்கள்