பாகிஸ்தானில், 35 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்த தலீபான்கள்

Read Time:1 Minute, 16 Second

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள ஹாங்கு மாவட்டத்தில் டோவாபா என்ற இடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தாக்கினர். அங்கு இருந்த 35 போலீஸ்காரர்களை அவர்கள் பணயக்கைதிகளாக கடத்திச்சென்று சிறை வைத்தனர். உள்ளூர் போலீஸ் தலைவர் ராணுவத்தின் உதவியை கோரியதோடு, ஹெலிகாப்டர்களையும் உதவிக்கு கேட்டார். ராணுவத்துக்கும், தலீபான்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. பழங்குடி இன தலைவர்கள், போலீஸ்காரர்களை விடுவிப்பதற்காகவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டோவாபாவில் அன்றைய தினம் காலையில் கைதான 7 தீவிரவாதிகளையும் விடுவிக்கவேண்டும் என்று தலீபான்கள் நிபந்தனை விதித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு சொந்தமான நிலத்தை கைப்பற்றினர்
Next post புனிதப்போரில் பங்கேற்கும் வகையில் குழந்தைகளை வளர்ப்போம்: பாகிஸ்தான் பெண்கள் மசூதி முன்பு சபதம்