கட்சி நிகழ்வுகளில் அரச ஊடகங்களுக்கு இடமில்லை -ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கிறது
ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அரச ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார் அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சி தொடர்பான பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த நிலமையினால் மக்கள் மத்தியில் பிழையான அபிப்பிராயம் ஏற்படக்கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு இனிமேல் அரச ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனவும் பொதுவிவகாரங்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது ஊடகவியலாளர் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அரச ஊடகங்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை எனக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் இதுதொடர்பாக உத்தியோக பூர்வ அறிவித்தல் இதுவரையிலும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating