இந்த வார ராசிபலன் (11.07.08 முதல் 17.07.08 வரை)

Read Time:12 Minute, 20 Second

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: எதிலும் நீக்குப் போக்குடன் நடந்து கொள்ளவும். கடன் தொல்லை அடையும். எதிர்ப்புகள் குறையும். மன மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டாரம் பெருகும்.
பெண்களுக்கு: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாம்பத்யத்தில் இனிமை கூடும். கணவருடன் சுமூக உறவு காணப்படும். பொருளாதாரம் மேம்படும்.
வேலை பார்ப்போருக்கு: வேலையில் நன்மைகள் கூடும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் முக்கிய திருப்பத்ைத எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)

பொது: குடும்பத்தில் பிரிவை எதிர்பார்க்கவும். மன மகிழ்ச்சி கூடும். மற்றவர்களிடம் மதிப்பு கூடும். காரியத்தை சாதிப்பதில் கில்லாடிகளாக இருப்பீர்கள். கடன் தொல்லை சரியாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

பெண்களுக்கு: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனக் கவலை குறையும். நிம்மதி குறையும். நிதானத்துடன் எதிலும் செயல்படவும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் சுவாரஸ்யம் கூடும். வார இறுதியில் நல்ல திருப்பத்தை எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் தேவை.

மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொது: அனைவருடனும் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மனக் கவலை நீங்கும். குழப்பம் சரியாகும். எதிர்ப்புகளை திறம்பட சமாளிப்பீர்கள்.

பெண்களுக்கு: பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. மனதில் உற்சாகம் நிலவும்.

வேலை பார்ப்போருக்கு: எதிலும் தெளிவுடன் செயல்படுவீர்கள். வேலையில் நிம்மதி நிலவும். சக ஊழியர்கள் சிறப்பாக ஒத்துழைப்பார்கள். மேலதிகாரிகளுடன் நல்லுறவு நீடிக்கும்.

கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொது: தொட்டது துலங்கும், நினைத்தது நடக்கும். பண வரவில் இருந்து வந்த தாமதம் சரியாகும். காரிய வெற்றி உண்டு. குடும்பத்தில் சுபகாரியம் கூடி வரும்.

பெண்களுக்கு: பயணங்களில் கவனம் தேவை. பொருள் இழப்புக்கு வாய்ப்புண்டு. நிதானம் அவசியம். அலுவலகத்தில் சுமூக நிலை காணப்படும். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும்.

சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

பொது: உங்கள் மனதுக்கு தோன்றிய முடிவின்படி செயல்படுவீர்கள். மற்றவர்களின் ஆதரவு சிறப்பாக கிடைக்கும். கடுமையாக உழைப்பீர்கள். சிறு விபத்தை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் மேம்படும்.

பெண்களுக்கு: கருத்து வேற்றுமை ஏற்படலாம். குடும்பத்தில் சுப காரியம் கூடி வரும். பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஏற்படும். அலுவலக சூழல் சாதகமாகவே காணப்படும். கணவருடன் சுமூக உறவு காணப்படும்.

வேலை பார்ப்போருக்கு: எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடம் கவனம் தேவை. வேலை மாற்றத்திற்கு வாய்ப்புண்டு. சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் விரும்பியபடி அமையும்.

கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொது: எதிலும் நெளிவு சுழிவுடன் நடந்து கொள்வீர்கள். செலவுகள் குறையும். வரவுகள் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணத்தால் நன்மைகள் உண்டாகும். முன் கோபத்தைக் குறைக்கவும்.

பெண்களுக்கு: நிதானமாக நடந்து கொள்ளவும். மற்றவர்களின் விமர்சனத்தால் மனக்குழப்பம் ஏற்படலாம். வார இறுதியில், சந்தோஷச் செய்தி வந்து சேரும்.

வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு குறையும். மன மகிழ்ச்சியுடன் வேலையில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களின் விமர்சனத்ைத பொருட்படுத்தாமல் கடுமையாக உழைப்பீர்கள்.

துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொது: காரியங்கள் வெற்றி பெறும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். நண்பர்கள் வட்டம் பெருகும். இதுவரை இருந்து வந்த தொல்லைகள் அகலும். மற்றவர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். முக்கிய காரியமாக வெளியூர் செல்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: பிரச்சினைகள் குறையும். வேலைப்பளு கூடும். வேலையில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)

பொது: தவறுகளைத் தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். நிர்ப்பந்தங்கள் உங்களை வருத்தமடையச் செய்யும். புதிய முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். எதிலும் கவனம் தேவை.

பெண்களுக்கு: உடல் நலனில் அக்கறை தேவை. வீண் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம். கூடுதல் கவனத்துடன் எதிலும் ஈடுபடவும். அலுவலகத்தில் சந்தோஷ செய்தி காத்திருக்கும். சுபகாரியம் கூடி வரும்.

வேலை பார்ப்போருக்கு: முக்கிய முடிவுகளில் நிதானம் தேவை. சக ஊழியர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய பொறுப்புகள் தேடி வரும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். இடமாறுதலும் விரும்பியபடி அமையும்.

தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொது: எந்த வேலையிலும் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். காதலில் சுப திருப்பம் ஏற்படும். காரியங்களில் நிதானம் தேவை. பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் புதிய உறவு வந்து சேரும்.

பெண்களுக்கு: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். திருமண பேச்சுக்கள் கூடி வரும். செலவுகள் அதிகரிக்கும். முக்கிய காரியமாக வெளியூர் போக நேரிடும். பயணங்களால் லாபம் உண்டாகும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் நல்ல திருப்தியுடன் இருப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வேலைக்கு மாற முயற்சிக்கலாம்.

மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். கடவுள் காரியத்திற்கு அதிகம் செலவழிக்க வாய்ப்பு உருவாகும். நிலவி வந்த தேக்க நிலை மாறும். குடும்பத்தில் உற்சாகம், உல்லாசம் அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும்.

பெண்களுக்கு: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். காரியங்களில் நல்ல பலன் காணப்படும். நினைத்ததை முடிப்பீர்கள். தடைகள், தாமதங்கள் விலகும்.

வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வேலை மாற்றத்ைத எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களுடன் ஒத்துழைப்பாக நடந்து கொள்வது நல்லது.

கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொது: எதிலும் சிறந்து விளங்குவீர்கள். பேச்சில் இனிமை கூடும். சாதுரியமாக செயல்படுவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். முடிப்பீர்கள்.

பெண்களுக்கு: கணவருடன் நல்லுறவு நிலவும். பொருள் இழப்புக்கு வாய்பப்புண்டு. கூடுதல் கவனத்துடன் எிலும் செயல்படவும். பொருளாதாரம் மேம்படும். செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும்

வேலை பார்ப்போருக்கு: வெளிநாட்டு வேலைக்கு வாய்ப்புகள் அதிகம். சக ஊழியர்கள் நன்கு ஒத்துழைப்பார்கள். புதிய வேலைக்கான முயற்சிகளில் பலன் காணப்படும். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: எச்சரிக்கையுடன் எதிலும் ஈடுபடவும். சவால்களை தைரியமாக சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருள் இழப்புக்கு வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் வந்து சேரும். மனக் கவலை அகலும்.

பெண்களுக்கு: நட்பு வட்டாரம் பெருகும். கணவருடன் பிணக்கு அகலும். வேலையில் சந்தோஷமாக இருப்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொலை தூரத்திலிருந்து நற் செய்தி வந்து சேரும். புதிய தோழிகள் கிடைப்பார்கள்.

வேலை பார்ப்போருக்கு: நினைத்தது நடக்கும். பிறருடன இருந்து வந்த பிணக்குகள் அகலும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கங்கையில் தனது மகனை வீச முயன்ற தாய் கைது
Next post பேநசீரை வித்தியாசமாக படம் பிடித்தவருக்கு விருது