செக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி(சினிமா செய்தி)… !!

Read Time:2 Minute, 42 Second

நடிகை இலியானா நண்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கேடி படத்திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வென்ஸ்டின் 80 நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான புகார் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக சமூக வலைத்தளத்தில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. அதில் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் தொல்லைகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து இலியானா அளித்த பேட்டி வருமாறு:-

“சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள்.

பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து நடிகைகள் வெளியே சொன்னால் அவர்கள் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும். இது கோழைத்தனமாக தெரிந்தாலும் அதுதான் உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மொழி படங்களில் நடித்த இளம் நடிகையை ஒரு பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த நடிகை என்னிடம் ஆலோசனை கேட்டார்.

நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லக் கூடாது என்று கூறிவிட்டேன். ஒருவருக்காக இன்னொருவர் முடிவுகள் எடுக்க முடியாது. எனது முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. தயாரிப்பாளர் ஆசைக்கு இணங்குவதா? இல்லையா? என்பதை அந்த இளம் நடிகைதான் முடிவு செய்ய வேண்டும்.

செக்ஸ் தொல்லைகளை துணிச்சலாக வெளியே சொல்வதன் மூலம்தான் இதை தடுக்க முடியும்.” இவ்வாறு இலியானா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அறை குளிரும்… கண் உலரும்(மருத்துவம்)…!!
Next post ஆபாசப் படத்துக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..!