அறை குளிரும்… கண் உலரும்(மருத்துவம்)…!!

Read Time:10 Minute, 47 Second

தேவை அதிக கவனம்

‘‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏர் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ ஆன் செய்துவிட்டு அந்தக் குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு ஆண்டுதோறும் நடக்கிற வழக்கமான ஓர் அனுபவமாகும்.

சூடான பருவநிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஏர் கண்டிஷன்(குளிர்ப்பதன வசதி) செய்யப்பட்ட அறையில் சராசரியாக, ஒரு நாளுக்கு 16 மணிநேரங்களைக்கூட பலர் செலவிடுகின்றனர். குளிரூட்டப்பட்ட அறையில் மணிக்கணக்கில் இருக்கும்போது நமது கண்களில் பிரச்னைகள் ஏற்படுவதை நாம் காணக்கூடும். நமது கண்கள் உலர்ந்து போவதையும், எரிச்சல் இருப்பதையும், அரிப்பதனால் தேய்க்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதையும், கண்களில் இருந்து நீர் வடிவதையும் நாம் பல நேரங்களில் உணரக்கூடும்.

உலர் கண் என்பதே இதற்கு பின்னால் இருக்கும் பொதுவான காரணமாகும். இதற்கு, உலர் கண் நோய்க்குறி (Dry eye syndrome) என்று பெயர்’’ என்கிறார் கண் சிகிச்சை மருத்துவரான சௌந்தரி.குளிர்சாதனங்களை நாம் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நிலைமையில், உலர் கண் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

*உலர் கண் உண்மைகள்

என்னதான் ஏர்-கண்டிஷனிங் அமைப்புகள் வெப்பத்தில் இருந்து நமக்கு நிவாரணத்தைக் கொடுத்தாலும் கூட, விரைவாகவே நமது கண்களையும் உலரச் செய்து விடுகின்றன. ஏர்-கண்டிஷனிங் அமைப்புகளைப் பயன்படுத்துகிற ஒவ்வொரு 10 நபர்களில் 4 பேர் வீதம் உலர் கண் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

கோடை காலங்களில் ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட மற்றும் காற்றோட்ட வசதியில்லாத அறைகளில் தமது நேரத்தை செலவிடுகிற நபர்களுக்கு, உலர் கண் நோய்க்குறி 10% முதல் 20% சதவீதம் வரை அதிகரிக்கிறது என உலகச் சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிடுகிறது. இத்தகைய நிலைமைகளின் கீழ், காற்றானது மிக அதிகமாக உலர்ந்து போகிற காரணத்தால், இயல்பான கண்ணீர் உற்பத்தியைக் கொண்டுள்ளவர்களும் கூட அவர்களது கண்களில் அசௌகரியத்தை உணர்வார்கள்.

மேலும், ஏர்-கண்டிஷனிங் கட்டடங்களில் உள்ள மோசமான துப்புரவும் தூய்மையற்ற நிலையும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவற்றின் பரவலுக்கு முக்கியமான காரணமாக உள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.உண்மையில் சொல்லப்போனால், உலர் கண் நோய்க்குறியானது அதிக அளவுகளில் காற்று மாசுபாட்டைக் கொண்டுள்ள நகரங்களில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.

புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் காற்று மாசுபாடு அதிகமாக இருப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான காற்று மாசுபாட்டைக் கொண்டுள்ள மற்ற நகரங்களைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக உலர் கண் நோய்க்குறியால் பாதிக்கப்படுகின்றனர்.

பணியிடத்தில் ஒரு கம்ப்யூட்டரை வழக்கமாகப் பயன்படுத்துகிற பெண்களுள் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் உலர் கண் நோயால்
பாதிக்கப்படுகின்றனர்.

*முக்கிய அறிகுறிகள்

கண்களில் எரிச்சல் உணர்வு, அரிக்கும் கண்கள், வலிக்கும் உணர்வுகள், கனமான கண்கள், புண்ணான கண்கள், உலர்வான உணர்வு மற்றும் மங்கலான பார்வை ஆகியவை உலர்ந்த கண்களின் மற்றும் உலர் கண் நோய்க்குறியின் அறிகுறிகள் ஆகும். உலர் கண்ணால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இந்தக் கோளாறின் கடுமை அதிகரிப்பதற்கு ஏற்ப வாசிக்கும் வேகமும் குறைந்துவிடுகிறது.

*உலர் கண் பாதிப்புக்கான முக்கிய காரணங்கள்
உலர் கண் நோய்க்குறி என்பது கண்ணீரின் மூன்று அடுக்குகளின் – அதாவது எண்ணெய்ப் பசையுள்ள (வெளிப்புற அடுக்கு), நீர்(நடுப்பகுதி அடுக்கு) மற்றும் புரதம்(உட்புற அடுக்கு) ஆகிய அடுக்குகளின் தரத்தில் அல்லது அளவில் ஏற்படும் மாற்றம் ஆகும். குறைந்த அளவிலான ஈரப்பதமுள்ள குளிரூட்டப்பட்ட சுற்றுச் சூழல்கள் நீரிய அடுக்கில் இருந்து ஆவியாதலை ஏற்படுத்துகின்றன.

இந்தச் சூழலில் கண்களில் உராய்வு நீக்கும் பசைத்தன்மை இல்லை எனில், கண்களில் அழற்சி மற்றும் நோய்த்தொற்று ஏற்பட்டு மிகவும் மோசமான நிலைமைக்கு வழிவகுக்கலாம். ஏர்-கண்டிஷனர்களும் கூலர்களும் கண்ணீர் படலத்திற்கு இடையூறு செய்வதிலும் அதை உலர்வாக்குவதிலும் ஒரு
முக்கியமான பங்கு வகிக்கின்றன.

இதனால், கண்ணீர் பாய்வு அமைப்பில் சமச்சீர்மை இல்லாமல் போகிறது.4உலர் கண் பாதிப்புக்கான வேறு முக்கிய காரணங்கள்
இயற்கையில் வயது முதிர்ச்சியடைதல், குறிப்பாக மாதவிடாய் நின்றுவிடுவதற்கு பிந்தைய கால பிரச்சினைகள்.நீரிழிவு, தைராய்டு சுரப்பிக்கோளாறுகள் மற்றும் வைட்டமின் A பற்றாக்குறை உள்ளிட்ட சில குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள் ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள் போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவுகள்.

லேசர் கண் அறுவைசிகிச்சையினை தொடர்ந்து உலர்கண் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவை தற்காலிகமானவையே.அழற்சி அல்லது கதிர்வீச்சுக் காரணமாக கண்ணீர் சுரப்பியில் சேதம். சிஜோகிரென்ஸ் நோய்க்குறி, முடக்குவாதம் மற்றும் தசை நார்ப் புரத ரத்த நாளம் போன்ற நோய்கள் கண்ணீரை உண்டாக்குகிற உங்கள் திறனை பாதிக்கும். உங்கள் கண்ணிமைகள் இயல்பாக எப்படி மூட வேண்டுமோ அப்படி மூட அனுமதிக்காத பிரச்னைகள்.

*உலர் கண் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள்

* ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளை மற்றும் காற்றோட்ட வசதியில்லாத அறைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
* ஏர்-கண்டிஷனரிலிருந்து வெளிவரும் காற்று உங்கள் மீது நேரடியாக படுவதைத் தவிர்க்கவும்.
* உங்கள் கண்களில் காற்று வலுவாக ஊதப்படுவதைத் தவிர்க்கவும்.
* உலர் கண் ஏற்படுவதைத் தடுப்பதற்கு புகையில் இருந்தும், புகைப்பிடிப்பவர் இடமிருந்து தூரமாக இருங்கள்.
* ஒவ்வொரு நாளும் போதுமான அளவு திரவ வகை உணவுகளைப் பருகுங்கள்.
* உணவில் உப்பு சேர்ப்பதைக் கட்டுப்படுத்தவும்.
* தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியமாகும். இது, கண்கள் தொடர்பான பாதகமான விளைவுகளில் இருந்து உங்களைக் காக்கும்.
* சூரியஒளி காப்புக் கண்ணாடிகள் (சன்கிளாஸ்) அல்லது பாதுகாக்கக்
கூடிய கண் அணிகலன்களை அணிய முயற்சியுங்கள்.
* உங்கள் உடல் அதிக அளவிலான கண்ணீரை உருவாக்குவதற்கும் சுரப்பதற்கும் கண் எரிச்சலையும் அழற்சியையும் குறைப்பதற்கும் உதவும்
என்பதால் அலுவலகத்திற்கு உள்ளேயான நடைமுறைகள் குறித்தும் கண் மருந்துகள் குறித்தும் ஒரு கண் மருத்துவர் வழங்கும் மருந்துகளை பயன்
படுத்துங்கள் மற்றும் பரிந்துரைகளை பின்பற்றுங்கள்.
* கண் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உராய்வு நீக்கும் திரவங்களைப் பயன்படுத்துங்கள்.உலர் கண்ணுக்கு எதிராக முன்னெச்சரிக்கை முறைகள் எடுக்கப்படவில்லை எனில், மக்கள் கண் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். உண்மையில் சொல்லப்போனால், போதுமான அளவு கண்ணீர் இல்லை எனில், கண்ணில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. உலர் கண்பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், கண் அழற்சி, கருவிழிப்படல மேற்பரப்பில் சிராய்ப்பு, கருவிழிப்படலப் புண் மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீமானும் வெளுத்து(வீடியோ)!!
Next post செக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி(சினிமா செய்தி)… !!