எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் மரணம்(உலக செய்தி)!!

Read Time:1 Minute, 41 Second

உகண்டா விமான நிலையத்தில் நிறுத்தபட்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் அவசர கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உகண்டாவில் உள்ள என்டிப்பி விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டிருந்துது. அது பயணிகளை ஏற்றுக் கொண்டு புறப்படுவதற்கு தயாரானபோது, விமானத்தில் அவசர வழி கதவை பணிப் பெண் ஒருவர் திறந்து சோதித்துள்ளார். அப்போது அவர் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்த அந்த பெண் கிசூபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனையில் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ உள்நாடு விமான போக்குவரத்துக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார்” என்றார். உகண்டா விமான போக்குவரத்து அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதேவிக்கு காபியில் அஞ்சலி! (வீடியோ)
Next post பிரான்ஸ் நாட்டு பெண் மீது பாலியல் சேட்டை – சிறுவன் கைது !!