ரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்?

Read Time:1 Minute, 52 Second

நடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக இருக்கிறார்கள். ஆலியா பட் ஏற்கனவே இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

அதன்பிறகுதான் ரன்பிர் கபூருடன் நெருக்கமாகி உள்ளார். ரன்பிர் கபூரும், கத்ரினா கைப்புடன் காதல் ஏற்பட்டு பின்னர் அவரை விட்டு பிரிந்துவிட்டார். ரன்பிர் கபூரும் ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா என்ற இந்தி படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தி நடிகை கரீனா கபூரும் நடிகர் சயீப் அலிகானும் ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்துள்ளனர். நடிகை அனுஷ்கா சர்மா சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை காதல் திருமணம் செய்துகொண்டார். பத்மாவத் படத்தில் சேர்ந்து நடித்த தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலித்து வருகிறார்கள். இப்போது ஆலியாபட்-ரன்பிர் கபூர் காதல் விவகாரமும் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகே…அழகே…(மகளிர் பக்கம்)!!
Next post Bed coffee பிரியரா நீங்கள்? புதுசா ட்ரை பண்ணுங்களேன்(மருத்துவம்)!!