சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக உள்ள பிரபல நாயகி(சினிமா செய்தி ) !!

Read Time:1 Minute, 41 Second

பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட பூஜா கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை எதிர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

நோய்யில் பரிதவித்து வரும் பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறிவருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமாவின் நிலை கவலைக்கிடம்(சினிமா செய்தி )… !!
Next post நெய் நிஜமாகவே ஆபத்தானதா(மருத்துவம்)?!