தந்தையாகும் கனவை சிதைக்கும், நீரிழிவு நோய்: விஞ்ஞானிகள் தகவல்

Read Time:2 Minute, 2 Second

நீரிழிவு நோயால் ஆண்களின் தந்தையாகும் வாய்ப்பில் பாதிப்பு ஏற்படுமா? என்று இங்கிலாந்தில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். டாக்டர் கான் மால்லிடிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், நீரிழிவு வியாதியால் பாதிக்கப்பட்டு இன்சூலின் தெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆண்களிடம் இருந்து விந்தணுக்களை சேகரித்து ஆராய்ந்தனர். ஆரம்ப கட்ட மைக்ரோஸ்கோப் சோதனையில் விந்தணுக்கள் சாதாரணமாக இருந்தன. அளவு மட்டும் சிறிது குறைந்து இருந்தது. அதையடுத்து டி.என்.ஏ. பாதிப்பு ஆராயப்பட்டது. அதில் விந்தணுக்களின் ஆர்.என்.ஏ. அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோன்றி இருப்பதும், அந்த மாற்றங்கள் மரபணுக்களில் (டி.என்.ஏ.) பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை உடையது என்றும் தெரிய வந்தது. டி.என்.ஏ.வில் ஏற்படும் இந்த பாதிப்பை சரி செய்ய இயலாது. அதாவது சுருங்கச் சொன்னால், விந்தணுக்களின் ஆரோக்கியத்தை நீரிழிவு நேரடியாக பாதிக்கிறது. இதனால் குறிப்பிட்ட ஆண்களின் தந்தை ஆகும் வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் ஏற்கவே நீரிழிவினால் பாதிக்கப்பட்டு தந்தை ஆக முடியாமல் இருக்கும் ஆண்களைப் பற்றிய புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, இதை உறுதி செய்ய முடிந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானை தாக்க தயாராகுங்கள்: இஸ்ரேலுக்கு புஷ் அறிவுரை
Next post நூலகத்தில் திருடப்பட்ட நூறு கோடி ரூபாய் புத்தகம் 10 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு