டாப்ஸியை மணக்க டுவிட்டரில் விருப்பம் : ரசிகர் ஏற்படுத்திய பரபரப்பு(சினிமா செய்தி) !!

Read Time:3 Minute, 4 Second

நடிகைகள் இணைய தள பக்கங்களில் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த பட்டியலில் நடிகை டாப்ஸியும் இடம்பெற்றிருக்கிறார். நடிகைகளுக்கு மட்டுமல்ல சக பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பேசி அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கருத்துதெரிவித்திருக்கிறார். தனது காதல் வாழ்க்கை மற்றும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றி டாப்ஸி குறிப்பிடும்போது, ‘பொய் பேசாதவராக இருக்கவேண்டும்’ என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் தெரிவித்திருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் ஒருவர் டாப்ஸிக்கு அவரது டுவிட்டர் பக்கத்திலேயே தன்னைப்பற்றி விவரித்து திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

‘ஹலோ டாப்ஸி, உங்களை நான் காதலிக்கிறேன். என்னை மணந்துகொண்டு என் வாழ்நாள் துணைவியாக நீங்கள் இருப்பீர்களா? நான் கற்பு நெறி தவறாத ஆண்மகன், குடிப்பழக்கம் கிடையாது, சைவ உணவுதான் சாப்பிடுவேன். இதெல்லாம் உண்மையா என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக உண்மை கண்டறியும் பரிசோதனையான நார்கோ டெஸ்ட்டுக்கும், பிரைன் மேப்பிங் டெஸ்ட்டுக்கும் நான் தயார்’ என அந்த ரசிகர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் வேறுசில ரசிகர்களோ, திருமணத்துக்கு விண்ணப்பம்போட்ட நபரை கலாய்த்திருக் கின்றனர். ‘டுவிட்டரில் திருமணத்துக்கு புரபோஸ்செய்த அந்த நபருக்கு கண்டிப்பாக பிரைன் மேப்பிங் டெஸ்ட் செய்தாக வேண்டும்’ என கிண்டல் செய்துள்ளனர். மற்றொரு ரசிகரோ, ‘அந்த நபரை நீங்கள் திருமணம் செய்வீர்களா? மாட்டீர்களா? என டாப்ஸியிடமே கேட்டிருக்கிறார். ரசிகர்களின் இந்த டுவிட்டர் தகவல்களை பகிர்ந்திருக்கும் டாப்ஸி,‘வாழ்க்கையில் உங்களுக்கு (விண்ணப்பம்போட்ட ரசிகர்) இதைவிட வேறென்ன வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் திருமணம் செய்வீர்களா என்றகேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்ஸாகியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ்சில் ஈடுபடுத்த 4 வயது மகளை விற்க முயன்ற தந்தை(உலக செய்தி )!!
Next post பைத்தியக்கார பயலுக…? Seeman funny (வீடியோ)!!