உளவாளி மீதான ரஷ்யாவின் ரசாயன தாக்குதல் எதிரொலி : பிரிட்னுக்கு ஆதரவாக களமிறங்கிய மேற்குலக நாடுகள்!!

Read Time:2 Minute, 18 Second

உளவாளி மீதான ரசாயன தாக்குதல் எதிரொலியாக ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஒன்று திரண்டுள்ளன. பிரிட்டனில் இருந்து 23 ரஷ்ய தூதர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அமெரிக்காவும் சியாட்டிலில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தை மூடியுள்ளது. அங்கிருந்த 60 ரஷ்ய அதிகாரிகளையும் வெளியேறவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை பின்பற்றி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, உக்ரைன், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பிரிட்டனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இது பற்றி பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ரஷ்ய தூதரக அதிகாரிகள் இருவரை வெளியேற உத்தரவிட்டுள்ளதாக கூறினார். பிரிட்டனின் சாலிஸ்பரி நகரில் கடந்த மார்ச் 4 அன்று நடத்தபட்ட உளவாளி மீதான ரசாயன தாக்குதல் அதிர்ச்சியளிப்பதாக கூறினார். இதற்கு பதிலடி தருவதற்காகவே 23 நாடுகளுடன் ஒருங்கிணைந்து ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். இதுவரை 24 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் உளவாளி மீதான ரசாயன தாக்குதல் புகாரை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளை வெளியேற்றி ரஷ்யா பதிலடி கொடுக்கும் என மாஸ்கோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யா முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்!!(வீடியோ)
Next post படுக்கை அறை ரகசியத்தை உடைத்த நடிகரின் மனைவி(சினிமா செய்தி) !!