வடக்கு சமர் முனையில் 7படையினர் உயிரிழப்பு
வடக்கின் களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுஞ்சமரில் இராணுவத்தினர் ஏழுபேர் உயிரிழந்தனர் என்றும் 25பேர் படுகாயமடைந்தனர் என்றும் வவுனியா பாலமோட்டை மற்றும் குங்சுக்குளம் ஆகிய பகுதிகளின் ஊடாக பிற்களச் சூட்டாதரவுடன் இராணுவத்தினர் முன்னேற முயன்றுள்ளனர். எனினும் அதற்கு தாங்கள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரில் இராணுவத்தினர் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைக்குச் சென்றனர் என்று விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். இதேவேளை யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் அன்றையதினம் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் பொறிவெடிகளில் சிக்கியதில் மூவர் உயிரிழந்தனர் ஒருவர் காயமடைந்தனர் மணலாறு முன்னரங்க நிலைகளில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சமர்களில் விடுதலைப் புலிகளில் 6பேர் உயிரிழந்ததுடன் 10பேர் படுகாயமடைந்தனர் என்று படையினர் தெரிவிக்கின்றனர்.
Average Rating