ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஜிம்பாப்வே மீது தடை விதிக்கும் தீர்மானத்தை ரஷியா-சீனா முறியடித்தது
Read Time:1 Minute, 20 Second
ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் வன்முறைகள் நடந்தன. இதனால் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஆயுதத்தடை மற்றும் ஜனாதிபதி ரபார்ட் முகாபே, மற்றும் 13 அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்துக்கு 9 நாடுகள் ஆதரவாக ஓட்டுப்போட்டன. ரஷியா சீனா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு நாடு ஓட்டு எடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு சபையில் 9 பேர் ஆதரவு தெரிவித்ததால் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. ரஷியாவும், சீனாவும் தங்களுக்கு உள்ள ரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் முறியடித்தன.
Average Rating