மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் கருணாஅம்மான் பொதுமக்களுடன் சந்திப்பு.. செஞ்சிலுவை அதிகாரிகளும் பங்கேற்பு!!
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாஅம்மான் மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் நேற்று பொதுமக்களையும் செஞ்சிலுவை சர்வதேச குழுவின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாற்றியுள்ளார் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பிறகு நான்கு வருடங்களின் பின்னர் கருணாஅம்மான் மக்களை பகிரங்கமாகச் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது மட்டக்களப்பில் உள்ள செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் அதிகாரிகளை தாம் சந்தித்தனர் எனத் தெரிவித்துள்ள கருணா அவர்கள் சிறுவர்களை படையணியில் சேர்ப்பது குறித்து செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் அதிகாரிகள் கேள்வியெழுப்பினர் என்றும் குறிப்பிடப்படுகிறது. சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது குறித்து விடயங்களை கையாள்வதற்காக பிரதீப் மாஸ்டரை தாம் நியமித்துள்ளார் என கருணாஅம்மான் தெரிவித்தார் செஞ்சிலுவை சர்வதேசக்குழு பெயர் பட்டியலொன்றை சமர்ப்பித்துள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்பது குறித்து ஆராய்ந்து இரண்டு வாரங்களின் பின்னர் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளனர் என்றும் கருணாஅம்மான் தெரிவித்துள்ளார்.
4 thoughts on “மட்டக்களப்பு மீனகம் அலுவலகத்தில் கருணாஅம்மான் பொதுமக்களுடன் சந்திப்பு.. செஞ்சிலுவை அதிகாரிகளும் பங்கேற்பு!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
பிள்ளையான் குழுவினரை அல்லது கருணா குழுவினரை விமர்சிக்கும் ஜனநாயகவாதிகள் மீது புலிச்சாயம் பூசி கொலை செய்வதன் மர்மம் என்ன?
neega ellam oru tamilan enduu solluriyal vanniyela tamilan kastappadduran enna seithaneengal?pulli payyum koncham porruthu irunthu parr…karunaa ammanukku …….
Vanakkam Tamilan…
Ippadi solli solliye tamilan thani aal aakiddaan.
Vanni tamilarukku Neenga enna seithneenga?
Nambungal Thamizh eezham naalai pirakkum.naaddin adimai vilangu therikkum.kayavar koodam thalai therikka oadum.