புளொட் அமைப்பினரால் அனுஸ்டிக்கப்படும், வீரமக்கள் தின நிகழ்வுகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினரால் வருடா வருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் வீரமக்கள் தின இறுதிநாளான வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள புளொட் காரியாலயங்களில் அஞ்சலி நிகழ்வுகளும், அஞ்சலிக் கூட்டங்களும் இன்று இடம்பெற்றுள்ளன. உயிரிழந்த புளொட் உறுப்பினர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியாவின் வேப்பங்குளம் பிரதேசத்திலிருந்து கோயில்குளத்திலுள்ள உமமாகேஸ்வரன் சமாதி நோக்கி அமைதி ஊர்வலமொன்றும் இடம்பெற்றுள்ளது. இதில் பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்ததாகவும், இதன்போது புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரின் உருவப்படங்களை ஊர்வலத்தில் பங்கேற்றோர் ஏந்தியவண்ணம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவில்குளம் உமாமகேஸ்வரன் சமாதிக்கு அருகில் உள்ள சிவன்கோவிலில் புளொட் இயக்கத்தினரால் இன்றுபகல் அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் உமாமகேஸ்வரன் சமாதியில் மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி நிகழ்வுகளும், பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பில் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகளும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தல், விளையாட்டப் போட்டிகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.
News- Thanks For… WWW.ATHIRADY.COM
Average Rating