மோசடி வழக்கொன்றில் பிக்கு மீது கல்கிஸ்ஸை நீதவான் பிடியாணை

Read Time:1 Minute, 46 Second

மோசடி வழக்கொன்றில் பிணையில் விடப்பட்டிருந்த பிக்கு ஒருவரை கைது செய்ய கல்கிஸ்ஸை நீதவான் ஹர்ஷாசேதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். ஐந்து இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை பெற்று தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட கிகும்மடுவ விமலபுத்தி தேரர் என்ற சந்தேகநபர் பணத்தை மீளக் கையளிப்பதாக தெரிவித்ததால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுப்பதற்காக விமானநிலைய பொலிஸாருக்கு மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் அறிவிக்குமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதேவேளை சம்பந்தப்பட்ட பிக்கு வெள்ளை நிறவேனில் கடத்தப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது பணத்தை மீளசெலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோட பிக்கு முயற்சிப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதை கருத்திற் கொண்ட நீதவான் பிக்கு மீது பிடியாணை பிறப்பித்தார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 5மாணவர்கள் பதுளையில் கைது