செங்கலடி ஈ.பி.டி.பி முகாம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது

Read Time:3 Minute, 20 Second

43.gif43.gif43.gifமட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கொம்மாதுறைப் பகுதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்கு பின்புறமாகவுள்ள காணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த ஒருவரது சடலம் காவல்துறையினரால் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் உத்தரவின் பேரில் இந்த சடலம் ஈ.பி.டி.பியின் முன்னர் நடத்தப்பட்டுவந்த முகாமொன்றின் வளவிலுள்ள மரக்கறித் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதென ஏறாவூர் பொலீஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி நாலக்க தெரிவித்துள்ளார். தோண்டியெடுக்கப்பட்ட மேற்படி சடலம் தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவருடையதென்று அவரது தந்தை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தநபர் கடந்தமாதம் பத்தொன்பதாம் திகதி செங்கலடியிலுள்ள பெற்றோல் செற்றுக்கு அருகாமையில் வைத்து கடத்தப்பட்டதாக பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளையடுத்தே ஈ.பி.டி.பியைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆட்கடத்தல் தொடர்பாக மேலும் இருவர் செங்கலடியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், இந்த இருவர்மீதும் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே சடலம் புதைக்கப்பட்ட இடம் கண்டு பிடிக்கப் பட்டிருந்ததாகவும் பதில் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இரண்டு கத்திகளும் மீட்கப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பில் மேலும் சிலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈ.பி.டி.பியினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டிருந்த பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவரே சுரேஸ்குமார் என்றும் அவரே படுகொலை செய்யப் பட்டிருப்பதாகவும் ஈ.பி.டி.பியினர் இருவர் பிள்ளையான் குழுவால் கடத்திச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சடலம் புதைக்கப்பட்ட விடயம் வெளிவந்து இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
Thankyou For…. WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “செங்கலடி ஈ.பி.டி.பி முகாம் பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது

Leave a Reply

Previous post தொடராக திருடிவந்த பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்கள் பதுளையில் கைது
Next post வெளிநாட்டவரின் இருநாள் ஆட்டத்துக்காக 60வருடம் வாழ்ந்த மக்களை விரட்டுவதா? -கொம்பனித்தெரு விவகாரத்தால் ஐ.தே.கட்சி சீற்றம்